SPB Life History
SPB Life History

50 ஆண்டுகால இசைப்பயணம் மண்ணில் சரிந்தது. சங்கீத உலகில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாக்கிய நாள் இன்று. இசை உலகிற்கு இன்று கருப்பு நாள் என்று கூட சொல்லலாம்.

SPB Life History : ஜூன் 4 ,1946 ஆந்திர மாநிலம் நகரி என்னும் ஊரில் பிறந்தார். இசை உலகில் வலம் வந்த இவர் திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்களால் கவரப்பட்டவர். இளம் வயதிலேயே சிறந்த பாடகர் என எஸ் ஜானகியால் அடையாளம் காணப்பட்டவர் இவர்.

1967 ஆம் ஆண்டு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ரமணா என்னும் படத்தில் தனது முதல் பாடலை பாடினார்.

1669 தமிழில் அறிமுகமான இவர் சாந்தி நிலையம் என்னும் படத்தில இயற்கை என்னும் கன்னி பாடல் மூலம் தமிழில் அறிமுகமானார்.ஆனால் அடிமைப்பெண் படத்தில் ஆயிரம் நிலவே வா என்னும் பாடல் தான் முதலில் தமிழில் திரையுலகிற்கு ஒலித்த பாடலாகும்.

எம் எஸ் விஸ்வநாதன் மற்றும் இளையராஜா ஆகியோரின் இசையில் அதிக பாடல்களை பாடி அசத்தியுள்ளார்.

வருங்கால கணவருடன் ரொமான்டிக் போட்டோ ஷூட் நடத்திய விஜே சித்ரா – இணையத்தில் டிரெண்டாகும் புகைப்படம்

இவருக்கு மிகவும் பிடித்த பாடல் கருணா திரைப்படத்தில் இருக்கும் மலரே மௌனமா என்னும் பாடல் ஆகும்.

15 மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களைப் பாடியுள்ளார் ஒரே நாளில் 19 தமிழ் பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளார். மேலும் 40 படங்களுக்கு இசையமைத்துள்ளார். 50 ஆண்டுகாலம் இசைப்பயணம் செய்துள்ளார்.

நான்கு மொழிகளில் சிறந்த பாடகருக்கான தேசிய விருது பெற்ற ஒரே பாடகர் எஸ் பி பி தான்.

இந்தியில் 16 பாடல்கள் 6 மணி நேரங்களில் பாடி சாதனை படைத்துள்ளார்.

இது மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து வெற்றி கண்டவர் இவர்.

நடிகர் கமல்ஹாசனும் எஸ்பிபியும் நெருங்கிய நண்பராகவே திகழ்ந்தனர். இதனால் நடிகர் கமல்ஹாசன் அவரை அன்னையா என்று தான் அழைப்பார்.