SP Jaganathan Sister Passes Away

சோகத்திலும் இன்னொரு சோகமாக இயக்குனர் எஸ் பி ஜனநாதன் வீட்டில் இன்னொரு மரணம் நிகழ்ந்துள்ளது.

SP Jaganathan Sister Passes Away : தமிழ் சினிமாவின் பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை போன்ற திரைப்படங்களை இயக்கிய தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர் எஸ்பி ஜனநாதன். இவரது இயக்கத்தில் அடுத்ததாக லாபம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி மற்றும் நாயகியாக சுருதிஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர்.

கோடை விடுமுறையில் இந்தப் படம் வெளியாக உள்ள நிலையில் இயக்குனர் எஸ் பி ஜனநாதன் உடல்நலக் குறைபாடு காரணமாக சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இவருடைய மறைவு திரையுலகில பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோகத்திலிருந்து இன்னும் யாரும் மீண்டு வராத நிலையில் எஸ்பி ஜனநாதன் வீட்டில் இன்னொரு மரணம் நிகழ்ந்துள்ளது.

அதாவது அவருடைய தங்கையாக லட்சுமி நேற்றிரவு காலமாகியுள்ளார். எஸ்பி ஜனநாதன் மறைவின்போது அவரது அருகில் அமர்ந்து இருந்த லட்சுமி மயக்க நிலையை அடைந்தார். இந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.