Southern Celebrities Voice for Master

மாஸ்டர் படத்தின் காட்சிகள் லீக் ஆகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் விஜய்க்காக திரையுலகப் பிரபலங்கள் ஒன்றிணைந்து உள்ளனர்.

Southern Celebrities Voice for Master : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தளபதி விஜய். இவரும் நடிகர் விஜய் சேதுபதியும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்க ஆண்ட்ரியா அர்ஜுன் தாஸ் சாந்தனு சேத்தன் என பல நடிகர், நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.

ரசிகர்கள் அனைவரும் நாளை வெளியாக உள்ள இந்தப் படத்திற்காக ஆவலோடு காத்திருந்த நிலையில் நேற்று படக்காட்சிகள் ஒவ்வொன்றாக இணையத்தில் லீக் ஆனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தயவுசெய்து லீக்கான காட்சிகளை ஷேர் செய்ய வேண்டாம். இது எங்களின் ஒன்றரை வருட உழைப்பு என கூறியிருந்தார்.

லோகேஷ் கனகராஜ் போலவே பல தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் மாஸ்டர் படம் இணையத்தில் லீக் ஆனது குறித்து பேசுகின்றனர். இவர்களின் நடித்த திரைப்படத்தை தடை செய்து திரையரங்குகளில் மட்டும் பாருங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.