Soori Vetrimaran Movie Update

நடிகர் சூரி ஹீரோவாக நடிக்க சூரிக்கு அப்பாவாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளாரா?

Soori Vetrimaran Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு பட வாய்ப்புகள் குவிந்து பிசியான நடிகராக இருந்து வருகிறார்.

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்க உள்ள படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இவ்வாறு இருக்க விஜய் சேதுபதி சூரிக்கு அப்பாவாக இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகவில்லை.

காமெடி நடிகர் சூரிக்கு அப்பாவாக முன்னணி தமிழ் நடிகர் விஜய்சதுபதி நடிப்பாரா என்பது ரசிகர்களுக்கு பெரும் கேள்வியாக உள்ளது. அறிவிப்பு வரை பொறுத்திருந்து பார்ப்போம்.