Soori Pair in Vetrimaran Movie

வெற்றிமாறன் படத்தில் பரோட்டா சூரிக்கு ஜோடியாக நடிக்கப்பவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Soori Pair in Vetrimaran Movie : தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. அஜித் விஜய் ரஜினி தனுஷ் சூர்யா கார்த்தி என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார்.

துணைவன் என்ற நாவலைத் தழுவி உருவாகி வரும் இந்தப் படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமானார். குளிர் அதிகம் நிலவும் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருவதால் உடல்நலம் கருதி பாரதிராஜா இந்த படத்தில் இருந்து வெளியேறினார்.

இதனையடுத்து பாரதிராஜாவுக்கு பதிலாக விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது இப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடிப்பதாக தெரியவந்துள்ளது.

இவர் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி தங்கையாக நடித்து திரையுலகில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.