Soori and Vetrimaran Movie Title

மிரட்டலான தலைப்பில் படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Soori and Vetrimaran Movie Title : தமிழ் சினிமாவில பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார்.

இதற்கு முன்னதாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. தனுஷ் திரைப்பயணத்தில் மிக முக்கிய படமாக இது அமைந்தது.

இந்தப் படங்களைத் தொடர்ந்து இவர் நடிகர் சூரியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதிய துணைவன் என்ற நாவலை தழுவி இந்த திரைப்படம் உருவாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக இந்த படத்திற்கு துணைவன் என்று டைட்டில் வைத்து விடலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கதையில் நடிகர் சூரி கார் டிரைவர் வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் படத்தின் படப்பிடிப்புகள் வெகுவிரைவில் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் தொடங்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

நடிகர் சூரி முதல் முறையாக ஹீரோவாக நடிக்க இருப்பது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.