Soori About Rajinikanth

சூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி எப்படி இருக்கிறார் என சூரி அண்ணாத்த பட அப்டேட்ஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.

Soori About Rajoni in Annathae : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். சூரி மற்றும் சதீஷ் ஆகியோர் முதல் முறையாக ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்ததையடுத்து ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் நடிகர் சூரி, அண்ணாத்தே சூட்டிங் ஸ்பாட்டில் தலைவர் கலக்கிறார். அவருடைய எனர்ஜி வேற லெவல் என குறிப்பிட்டுள்ளார்.

சூரியின் இந்த ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.