சூரரை போற்று படத்தின் ட்ரெய்லர் குறித்து வெளியான மாஸ் அப்டேட் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள் | Suriya

Soorarai Pottru Trailer Running Time : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சூரரைப் போற்று என்ற திரைப்படம் வெளியாக உள்ளது இப்படத்தை இறுதிச்சுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்க ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படமாக சூரரைபோற்று இருந்து வருகிறது. இப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாகவுள்ளது.

படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலரின் ரன்னிங் டைம் என்ன என்பது தெரியவந்துள்ளது.

அதாவது சூரரை போற்று ட்ரெய்லர் ஒரு நிமிடம் 52 செகண்ட் கொண்டதாக இருக்கும் என தகவல் கிடைத்துள்ளது. இதனை சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

சூரரைப்போற்று படத்திற்கு அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.