Soorarai Pottru Trailer Release Update
Soorarai Pottru Trailer Release Update

சூரரைப் போற்று படத்தின் ட்ரைலர் ரிலீஸ் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Soorarai Pottru Trailer Release Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்துள்ளார்.

ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆகவேண்டிய இப்படம் கொரானா வைரஸ் பரவல், ஊரடங்கு உத்தரவு, தியேட்டர் மூடல் போன்ற காரணங்களால் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது.

இதனால் இப்படம் அடுத்த வருடம் தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் டிரைலருக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி சூரரைப்போற்று படத்தின் டிரைலர் சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23ம் தேதி வெளியாகலாம் என கூறப்படுகிறது.

படம் ஹிட்டு ஆனால் தயாரிப்பாளருக்கு லாஸ்.. கத்தி படத்தின் பட்ஜெட், வசூல் என்ன தெரியுமா? தயாரிப்பாளருக்கு இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியாக்கும் முழு விவரம்!

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் சூர்யா ரசிகர்களும் டிரைலர் வெளியானது புதுப்புது சாதனைகளைப் படைக்க வேண்டும் என ஆயத்தமாகி வருகின்றனர்.

சூரரைப்போற்று படத்தை தொடர்ந்து சூர்யா ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்திலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்திலும் நடிக்க உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் பக்கா கிராமத்து கதையிலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.