Soorarai Pottru Business With Amazon
Soorarai Pottru Business With Amazon

மாஸ்டர் படத்தை தொடர்ந்து சூரரைப் போற்று படத்திற்கு விலை பேசியுள்ளது அமேசான் நிறுவனம்.

Soorarai Pottru Business With Amazon : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் ஏப்ரல் 9ம் தேதியே ரிலீசாக இருந்தது. ஆனால் கொரானா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படம் ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளிப் போய் வருகிறது‌.

OTT வழியாக படத்தை வெளியிடுவதால் நஷ்டம் – சூர்யாவை தாக்கினாரா தமிழக அமைச்சர்?

மேலும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டு வருகிறது. இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை உரிமையை அமேசான் நிறுவனம் ரூபாய் 15 கோடிக்கு வாங்கி இருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த படம் மட்டுமல்லாமல் சூரரைப்போற்று திரைப்படத்திற்கும் அமேசான் நிறுவனம் விலைபேசி வருகிறது.

மேலும் இப்படத்தை பொன்மகள் வந்தாள் திரைப்படம் போல நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிட அந்நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.‌ ஆனால் நடிகர் சூர்யா இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

சூரரைப் போற்று திரைப்படம் ஊரடங்கு முடிந்த பிறகு தியேட்டரில் தான் ரிலீசாக வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.

மாஸ்டர் படத்தை கைப்பற்றிய அமேசான் நிறுவனம்.. அதுவும் எத்தனை கோடிக்கு தெரியுமா? – வெளியான ஷாக்கிங் தகவல்

இதன் காரணமாக அமேசான் நிறுவனம் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ரூ 8 கோடி முதல் ரூ 10 கோடி வரை வியாபாரம் பேசி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த விலைக்கு வாங்கினால் படம் தியேட்டரில் வெளியான பிறகே அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.