Soorarai Pottru 1st Day Collection

சூரரைப்போற்று படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Soorarai Pottru 1st Day Collection : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ‌சூர்யா. இவரது நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் சூரரைப்போற்று என்ற திரைப்படம் உலகம் முழுவதும் அமேசான் பிரைம் வீடியோ வழியாக கடந்த நவம்பர் 12ஆம் தேதி வெளியானது.

படத்தின் டீசர் டிரைலர் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் படம் மிகுந்த பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது.

ஆக்சன் எமோஷன் லவ் என அனைத்திலும் சூர்யா உட்பட அனைவருமே அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் முதல் நாளில் மட்டும் இப்படத்தை 55 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்து இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனை விக்கெட்டாக மாற்றினால் ஒரு டிக்கெட்டுக்கு 120 ரூபாய் என கணக்கிட்டாலும் முதல் நாள் வசூல் மட்டும் ரூபாய் 600 கோடியை தாண்டி இருக்கும் என கூறப்படுகிறது.

இதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். அதேசமயம் சூரரைப்போற்று திரைப்படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். எங்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமைந்திருக்கும் என ரசிகர்கள் வருத்தப்பட்டும் வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.