Soorarai Potru
டிசம்பரில் சூர்யாவுடன் நேருக்கு நேராக இளம் நடிகரின் படம் மோத இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது காப்பான் படத்தை தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்து வருகிறார்.

அபர்ணா பாலமுரளி நாயகியாக நடித்து வரும் இந்த படம் கிறிஸ்துமஸ் விருந்தாக டிசம்பர் மாதத்தில் ரிலீசாக உள்ளது.

இந்த படத்துடன் சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படம் நேருக்கு நேராக ஒரே நாளில் மோத இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஹீரோ திரைப்படத்தை இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கியுள்ளார். KJR ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.