Soorarai Potru Release in Theatres

திரையரங்குகளில் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Soorarai Potru Release in Theatres : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படம் அமேசான் பிரைம் வீடியோ வெளியானது. இந்த நிலையில் தற்போது தெலுங்கானா மற்றும் ஆந்திரா பகுதிகளில் உள்ள சிங்கிள் ஸ்க்ரீன் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள மக்களை திரையரங்கிற்கு மீண்டும் வர வைக்க சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் திரையரங்க உரிமையாளர்கள் இறங்கியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால் விரைவில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சூர்யாவின் சூரரைப்போற்று படங்களை தியேட்டர்களில் கண்டு களிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.