Soorarai Potru Record in Google

சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் அடுத்தடுத்து பிரம்மாண்ட சாதனைகளை படைத்து வருகிறது.

Soorarai Potru Record in Google : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சூரரைப்போற்று என்ற திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்தப் படம் வெளியான அன்றே 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது. தற்போது வரை 110 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் இப்படத்தை கண்டுகளித்துள்ளனர்.

மேலும் இந்த படம் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட படமாக இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனைப் சூர்யா ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி தீர்த்தனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது கூகுளிலும் அதிகம் தேடப்பட்ட படங்களில் இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது சூரரைப் போற்று திரைப்படம்.

இந்த சாதனை சூர்யா ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.