சூரரைப் போற்று
ஹாலிவுட் படத்தையும் ஓரங்கட்டி உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளது சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்.

Soorarai Potru Movie Rating : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அமேசான் பிரைம் வீடியோ வழியாக தெரியாமல் திரைப்படம் சூரரை போற்று.

சுதா கொங்கரா இயக்க சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். மேலும் சூர்யாவின் அம்மாவாக ஊர்வசி நடித்திருந்தார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து இருந்தார்.

படம் அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் இந்த படத்தின் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இதுவரை ஐஎம்டிபி இணையதளத்தில் 9.3 ரேட்டிங் பெற்று உலக அளவில் முதல் இடத்தை பிடித்திருந்த திரைப்படமான The Shawshank Redemption இந்த படத்தை பின்னுக்கு தள்ளி 9.4 ரேட்டிங் உடன் உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளது சூரரைப் போற்று திரைப்படம்.

இந்த தகவலால் சூர்யா ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்ததோடு சூரரைப்போற்று படத்தின் வெற்றியை இன்னும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.