Soorarai Potru Hindi Remake Update

சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தின் இந்தி ரீமேக் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Soorarai Potru Hindi Remake Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரை போற்று. சுதா கொங்கரா இயக்கத்தின் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. ஹிந்தி வெர்ஷனையும் சுதா கொங்கரா இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இப்படியான நிலையில் தற்போது இந்த படத்திலே அமேசான் பிரைம் வீடியோ உதான் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் சூரரை போற்று படத்தின் இந்தி ரீமேக் கைவிடப்பட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.