Soorarai Potru 3 Week Collection Report

சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் பாகுபலி சாதனையை பின்னுக்குத் தள்ளியுள்ளது.

Soorarai Potru 3 Week Collection Report : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியானது. இதுவரை இந்த படத்தை 110 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் படம் வெளியான மூன்று வாரத்தில் சுமார் ரூபாய் 370 கோடி வசூலை பெற்று இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

முதல் நாளே இந்தப் படத்தை 55 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து இருந்தனர். இதனை திரையரங்குகள் டிக்கெட் கணக்கிற்கு மாற்றினால் முதல் நாள் வசூலே 600 கோடியை தாண்டி இருக்கும் என கூறப்படுகிறது. வெறும் நான்கே நாட்களில் ஆயிரம் கோடி வரை வசூல் கிடைத்திருக்கும்.

இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.