டாக்டர் படத்தின் சோ பேபி பாடல் புதிய சாதனை படைத்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

So Baby Song Record : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இருந்து சமீபத்தில் சோ பேபி என்ற பாடல் வெளியாகி இருந்தது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படியான நிலையில் தற்போது சோ பேபி பாடல் யூ டியூபில் 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இது குறித்த அறிவிப்பை சோனி நிறுவனம் வெளியிட ரசிகர்கள் இதனை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.