So Baby Song Controversy

அனிருத் இசையில் வெளியான சோ பேபி பாடலும் ஆங்கில ஆல்பம் பட பாடல் ஒன்றும் காப்பி என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

So Baby Song Controversy : தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் அணிருத். அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக டாக்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் தான் இசை அமைத்துள்ளார்.

இப்படத்தில் இருந்து சோ பேபி பாடல் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது. யூடியூபில் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது. இப்படியான நிலையில் இது ஆங்கில பாடல் ஒன்றின் காப்பி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பலமுறை காப்பிகேட் சர்ச்சையில் சிக்கியுள்ள அனிருத் மீண்டும் அதே சர்ச்சையில் சிக்கி இருப்பது ரசிகர்களிடையே கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.