sneha-prasanna
தன்னுடைய மகளின் பெயரை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் பிரசன்னா.

Sneha Prasannaa Daughter Name : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரசன்னா. இவர் நடிகை சினேகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ள நிலையில் சமீபத்தில் தான் இரண்டாவதாக மகள் பிறந்திருந்தாள்.

இந்நிலையில் பிரசன்னா அளித்துள்ள பேட்டி ஒன்றில் தங்களுடைய மகளுக்கு ஆத்யந்தா என்ற பெயர் வைத்துள்ளதாக கூறியுள்ளார். ஆதியும் அந்தமும் அற்றவள் என்பது தான் இந்த பேரின் அர்த்தமாம்.

மேலும் சினேகா முதல் முறையாக கர்ப்பமாக இருக்கும் போதே தங்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்கும் என எண்ணி ஆத்யா என்ற பெயரை தேர்வு செய்து வைத்திருந்தார்களாம். ஆனால் அது ஆணாகி விட்டது.

தற்போது பெண் குழந்தை பிறந்து விட்டது, எங்களுக்கு வேறு பெயரின் மீது எண்ணம் போகவில்லை. ஆகையால் இந்த பெயரையே கொஞ்சம் மாற்றி ஆத்யந்தா என வைத்து விட்டோம் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.