Sneha Prasanna Celebrates Her Wedding Anniversary
Sneha Prasanna Celebrates Her Wedding Anniversary

நடிகை சினேகாவும் பிரசன்னாவும் தங்களது திருமண நாளை நீருக்கடியில் கொண்டாடியுள்ளனர்.

Sneha Prasanna Celebrates Her Wedding Anniversary : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர், நடிகைகளாக வலம் வருபவர் பிரசன்னா மற்றும் சினேகா. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட ஸ்நேகா அதன் பின்னர் மீண்டும் தன்னுடைய அடுத்த இன்னிங்சை தொடங்கியுள்ளார்.

தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாசு படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

மனசு நிறைய ஒரே வேண்டுதல்.. ஆனால் கடவுள் கைதட்டி சிரித்தார் – தமிழில் பதிவிட்டு வேதனையை கொட்டித் தீர்த்த பிரியா பவானி சங்கர் – வைரலாகும் பதிவு!

இந்த நிலையில் சினேகாவும் பிரசன்னாவும் சமீபத்தில் தனது எட்டாவது வருட திருமண நாளைக் கொண்டாடி உள்ளனர்.

இது குறித்து ஸ்னேகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களுடைய திருமண நிகழ்வுகள் குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அப்போது முதல் வருட திருமண நாளை நீருக்கடியில் கொண்டாடிய புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளனர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இப்படியும் கல்யாண நாளைக் கொண்டாடலாமா என வியந்து வருகின்றனர்.