Small Boy in Karnan Movie

கர்ணன் படத்தில் குதிரையுடன் வந்தச் சிறுவன் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Small Boy in Karnan Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் கர்ணன். இந்த படத்தினை மாரி செல்வராஜ் இயக்க சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். கலைப்புலி எஸ் தாணு அவர்கள் படத்தை தயாரித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மூன்று நாளில் ரூபாய் 25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இந்த படத்தில் தனுஷ் மட்டுமல்லாமல் லால், நட்டி நட்ராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பும் பெரிதாக பாராட்டப்பட்டது. அதேபோல் சிறுவன் ஒருவன் அடிக்கடி குதிரையுடன் வந்த காட்சிகளும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது இந்த சிறுவன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இவர் பெயர் காளி. உண்மையாகவே குதிரை சவாரி செய்ய கற்றுக் கொண்டவர். கர்ணன் படம் மட்டுமில்லாமல் இவர் சில சீரியல்களில் நடித்துள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.