பாட்டி கம்மி பாடல் 7 வயது சிறுவன் வெறித்தனமாக நடனம் ஆடியதை பார்த்து பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி பாராட்டித் தள்ளியுள்ளார்.
Small Boy Dance to Vaathi Comming : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க அனைத்து பாடல்களும் ஹிட்டடித்தன. குறிப்பாக வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆடாத பிரபலங்களில் இல்லை என கூறலாம். ரசிகர்களை கூட இந்த பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது இந்தியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் டான்சர் நிகழ்ச்சியில் 7 வயது சிறுவன் இப்பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடியுள்ளார். நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக பங்கேற்றிருந்த ஷில்பா ஷெட்டி அந்தச் சிறுவனைப் பாராட்டி தள்ளியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடம் லைக்குகளை அள்ளி வருகிறது.