SJ Surya thanks to Director
SJ Surya thanks to Director

தன்னுடைய நடிப்பை பாராட்டி பதிவிட்ட இயக்குனருக்கு நன்றி கூறியுள்ளார் எஸ் ஜே சூர்யா.

SJ Surya thanks to Director – தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ்ஜே சூர்யா. பல வெற்றி படங்களை கொடுத்த இவர் தற்போது ஹீரோவாகவும், வில்லனாகவும் திரைத்துறையில் மிரட்டி வருகிறார்.

சூப்பர் ஹிட் இயக்குனருடன் தல அஜித், இணையத்தில் வைரலாகும் இதுவரை பார்த்திராத புகைப்படம்.!

இவரது நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இறைவி திரைப்படம் வெளியாகி நான்கு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அது குறித்து கார்த்திக் சுப்புராஜ் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்த விக்னேஷ் சிவன் விரைவில் எனக்கு ஃபேவரைட் ஆன திரைப்படம். எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு மிகவும் அற்புதம் என அவர் பாராட்டியுள்ளார்‌‌.

விக்னேஷ் சிவனின் இந்த பாராட்டிற்கு எஸ் ஜே சூர்யா நன்றி என பதிவிட்டுள்ளார்.

எஸ் ஜே சூர்யாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவர் செல்வராகவன் இயக்கத்தில் நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தைப் பற்றிய கேள்வியையே எழுப்பியுள்ளனர்.

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சம்மறப்பதில்லை திரைப்படம் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்து வருகிறது.இந்தப் படத்திற்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.