Sivappu Manjal Pachai Movie Review : Click Here to Read Review | G.V Prakash | Sidharth | Sasi | Kollywood Cinema News | Tamil Cinema News
சசி இயக்கத்தில் ஜி. வி பிரகாஷ், சித்தார்த் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Sivappu Manjal Pachai Movie Review : 

படத்தின் கதைக்களம் :

ஜி. வி பிரகாஷ் பெற்றோரை இழந்து தன்னுடைய அக்காவுடன் வாழ்ந்து வருகிறார். இவர் ஒரு பைக் பிரியர். ஒரு முறை பைக் ரேஸின் போது போக்குவரத்து அதிகாரி சித்தார்த்திடம் சிக்கி கொள்கிறார்.

அதன் பின்னர் விதியின் விளையாட்டால் ஜி. வியின் அக்காவிற்கு மாப்பிள்ளையாக சித்தார்த் வருகிறார். இருவருக்கும் திருமணமும் நடைபெறுகிறது. இவர்களுக்கு இடையே இருக்கும் பிரச்சனையால் ஜி.வியின் அக்கா பாதிப்புள்ளாகிறார்.

இதனால் மாமன் மச்சானான ஜி.விக்கும் சித்தார்த்துக்கும் இடையே மோதல் உச்சம் தொடுகிறது. அதன் பின்னர் என்ன நடக்கிறது? இருவரும் இணைந்தார்களா இல்லையா? என்பது தான் குடும்ப பாசமும் உணர்வும் கலந்த கதை.

சங்கீதா விஜயுடன் ஷாலினி அஜித், லைக்ஸ் குவிக்கும் புகைப்படம் – ஷாலினி என்ன செய்கிறார் பாருங்க.!

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

ஜி. வி பிரகாஷ் இந்த காலத்து இளைஞர்களின் பிரதிபலிப்பாக வாழ்ந்துள்ளார். சித்தார்த் நேர்மையாக போலீஸ் அதிகாரியாக அருமையான நடிப்பை கொடுத்துள்ளார்.

ஜி.வி பிரகாஷின் அக்காவாக நடித்துள்ள லிஜோ மோலின் கதாபாத்திரம் படத்தின் பலமாக \ பாலமாக அமைந்துள்ளது. அன்பு, பாசம், வலி என அனைத்தையும் தன் கண்களின் வழியே கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

தொழில்நுட்பம் :

இசை :

சித்து குமாரின் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

ஒளிப்பதிவு :

பிரசன்னா குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு உயிர் கொடுத்துள்ளது.

எடிட்டிங் :

சான் லோகேஷ் அழாகான கோர்வையாக படத்திற்கு எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இயக்கம் :

சசி பிச்சைக்காரன் படத்தின் மூலமாக அம்மாவிற்கும் மகனுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டத்தை படமாக்கியதை போல இந்த படத்தில் மாமனுக்கு மச்சானுக்கும் இடையே நடக்கும் பிரிவையும் மோதலையும் இவர்களுக்கு இடையேயான அன்பையும் அழகாக படமாக்கியுள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. நடிகர், நடிகைகளின் நடிப்பு
2. படத்தின் கதைக்களம்
3. குடும்ப பாசத்தை பேசியது.

தம்ப்ஸ் டவுன் :

1. வழக்கமான லாஜிக்கல் தவறுகள்.

மொத்தத்தில் சிவப்பு மஞ்சள் பச்சை குடும்பத்துடன் குதூகலமாய் பார்த்து மகிழ ஏற்ற திரைப்படம்.

REVIEW OVERVIEW
சிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
sivappu-manjal-pachai-movie-reviewமொத்தத்தில் சிவப்பு மஞ்சள் பச்சை குடும்பத்துடன் குதூகலமாய் பார்த்து மகிழ ஏற்ற திரைப்படம்.