Sivakarthikeyan Reduces Weight for Don Movie

நடிகர் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு என்னாச்சு என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Sivakarthikeyan Reduces Weight for Don Movie : தமிழ் சினிமாவில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக பயணத்தை தொடங்கி தொகுப்பாளராகவும் காமெடி நடிகராகவும் வளர்ந்து இன்று தமிழ் சினிமாவில் நாயகனாக தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் சிவகார்த்திகேயன்.

இவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர், அயலான் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதனை தொடர்ந்து டான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தினை சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளார். லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவாவே இந்த படத்தினை தயாரிக்க உள்ளார்.

தற்போது இந்த படத்திற்காக தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். உடல் மெலிந்தும் தலை பெரியதாகவும் இருக்கும் சிவாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.

சிவாவுக்கு என்னாச்சு என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Attachments area