Sivakarthikeyan
தோல்வியடைந்த ஒரு படத்தில் நடித்தது என்னுடையது தவறு தான் என சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தொடர் வெற்றிகளாக கொடுத்து வந்த சமயத்தில் பொன்ராம் இயக்கத்தில் வெளியான சீமராஜா, எம் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான மிஸ்டர் லோக்கல் திரைப்படமும் சறுக்கத்தை கொடுத்தது.

இதனையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்த நம்ம வீட்டு பிள்ளை படம் வெளியாகி விட்ட இடத்தை சிவகார்த்திகேயனுக்கு பெற்று கொடுத்தது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நான் மிஸ்டர் லோக்கல் படம் வேண்டாம் எனக்கு வேறு கதை வேண்டும் என கூறி இருக்க வேண்டும், ஆனால் அப்போதைய சூழ்நிலையில் இந்த படத்தில் நடித்து கொடுத்தால் போதும் என நடித்து விட்டேன், அது நான் செய்த தவறு தான்.

எம். ராஜேஷை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன், சிவா மனசுல சக்தி என வெற்றி படங்களை கொடுத்தவர் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.