Hero Movie
இதுவரை தமிழகத்தில் ஹீரோ எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற விவரம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் ஹீரோ. இந்த படத்தை பி.எஸ் மித்ரன் இயக்கி இருந்தார்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் முதல் வார முடிவில் எப்படியும் தமிழகத்தில் ரூ 30 கோடியாவது வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இறுதியில் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியுள்ளது. தற்போது வரை தமிழகம் முழுவதும் சேர்த்து இப்படம் ரூ 16 கோடி தான் வசூல் செய்துள்ளதாம்.

இது தான் சிவகார்திகேயன் படங்களிலேயே குறைந்த வசூல் எனவும் கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.