குக் வித் கோமாளி சீசன் 2-ல் நடிகர் சிம்புவும் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Singer Thee in Cook With Comali : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் குக் வித் கோமாளி. எச்சிலை சீசன் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து தற்போது ஒளிபரப்பாகி வரும் இரண்டாவது சீசனும் ஏப்ரல் 14ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே எபிசோடின் சிறப்பு விருந்தினராக நடிகர் சிம்பு பங்கேற்க உள்ளார். இதற்கான ப்ரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த நிலையில் தற்போது இன்னொரு புகைப்படம் ஒன்று வெளியாகி விட்டது.
அதாவது சிம்பு மட்டுமல்லாமல் என்ஜாயி என் சாமி பாடல் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள பாடகி தீ அவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் என தெரியவந்துள்ளது.
தர்ஷா குப்தா மற்றும் ரித்திகா ஆகியோர் பாடகி தீயுடன் இணைந்து புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டுள்ளனர். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.