Singer SPB Health Condition
Singer SPB Health Condition

கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்பிபியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Singer SPB Health Condition : தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல மொழிகளில் பாடகராக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருப்பவர் இயக்குனர் பாலசுப்பிரமணியம்.

பாடகராக மட்டுமல்லாமல் நடிகராகவும் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆரம்பத்தில் லேசான அறிகுறி மட்டுமே இருப்பதாகவும் தன் ஆரோக்கியமாக இருப்பதாகவும் எஸ்பிபி வீடியோ ஒன்றில் தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.

இதனால் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் அளித்துள்ளனர். பாடகர் எஸ்பிபி அவர்கள் கூடிய விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என அனைவரும் இறைவனை பிரார்த்தித்து வருகின்றனர்.