Sindhubaadh to Release in June :
சிந்துபாத் படத்தின் செங்கல்பட்டு வெளியீட்டு உரிமையை பிரபல லிப்ரா தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதைதொடர்ந்து படம் ஜூன் மாதம் திரைக்கு வரும் என்றும் சொல்லப்படுகிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே பேட்ட, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அடுத்த மாதம் சிந்துபாத் வெளியாகவுள்ளது.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களின் இயக்குனர் அருண் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலியும் அவருடைய மகனாக அவரது சொந்த மகன் சூர்யாவும் நடித்துள்ளனர்.
சூரரைப் போற்று படத்தின் பாடல் குறித்த அப்டேட் – செம காம்பினேஷன்.!
ஏற்கனவே டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படம் மே 16-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அதற்கு அடுத்த நாளே சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் சிந்துபாத் படத்துக்கு போதுமான திரையரங்குகள் கிடைக்காமல் போனது. இதனால் சிந்துபாத் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோனது.
இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் தற்போது படு ஜோராக நடைபெற்று வருகிறதாம்.
முதல்கட்டமாக இப்படத்தின் செங்கல்பட்டு வெளியீட்டு உரிமையை பிரபல லிப்ரா தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதைதொடர்ந்து படம் ஜூன் மாதம் திரைக்கு வரும் என்றும் சொல்லப்படுகிறது.