லேட்டா ரிலீசானாலும் சிந்து பாத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வருகிறது.
SindhuBaadh Movie : தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன் என எந்த வேடமாக இருந்தாலும் வெய்ட் காட்டி வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் நேற்று சிந்துபாத் என்ற திரைப்படம் ரிலீசாகி இருந்தது.
அருண் குமார் இயக்கி இருந்த திரைப்படம் காது கேளாதவராக விஜய் சேதுபதி நடிக்க அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதியின் மகன் சூரியாவும் முதல் முறையாக படத்தில் நடித்துள்ளார்.
பேசினாலே கத்தி பேசும் அஞ்சலிக்கும் காதுகேளாத சிறுசிறு திருட்டு வேலைகளை செய்து வரும் விஜய் சேதுபதிக்கும் இடையே காதல் ஏற்பட அந்த காதலை அஞ்சலியின் மாமா எதிர்க்கிறார்.
அதன் பின் என்னவெல்லாம் நடக்கிறது? இவர்கள் எப்படி திருமணம் செய்து கொள்கிறார்கள்? திருமணத்திற்கு பிறகு என்ன நடக்கிறது என்பதையெல்லாம் வித்தியாசமான திரைக்கதை மூலமாக அருண் குமார் கூறியிருப்பதால் படம் ரசிககிறாள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இரண்டு நாளில் வசூலிலும் மாஸ் காட்டி வருவதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கூறுவதால் படத்தின் வசூல் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.