செம ஹிட்டான பாட்டு டிக் டாக் செய்து அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் சிம்ரன்.
Simran Tik Tok to Butta Bomma Song : தமிழ் சினிமாவில் 1990 முதல் தற்போது வரை பிரபல நடிகையாக வலம் வருபவர் சிம்ரன். இவர் மீண்டும் பேட்ட படத்தில் நாயகியாக ரீ என்ட்ரி கொடுத்து அடுத்தடுத்து படங்களில் ஹீரோயினாகவே நடித்து வருகிறார்.
மேலும் டிக்டாக்கில் தனக்கென கணக்கு தொடங்கி விதவிதமான பாடல்களுக்கு டிக் டாக் செய்து அசத்தி வருகிறார். அந்த வீடியோக்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடுகிறார்.
தற்போதும் அப்படித்தான் தெலுங்கு சினிமாவில் செம ஹிட்டடித்த புட்ட பொம்மா பாடலுக்கு டிக் டாக் செய்துள்ளார்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டு இருக்கிறது.