Simbu Video About Mother's Love

அம்மாவின் அன்பு இதுதான் என சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Simbu Video About Mother’s Love : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் 10 தல என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சிம்பு பழையபடி தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக மாறியுள்ள நிலையில் சமூக வலைதள பக்கங்களில் என்ட்ரி கொடுத்து ஆக்டிவான ஒருவராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த்ரோபேக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் உஷா ராஜேந்தர் தன்னுடைய மகன் சிம்புவிற்கு உணவு ஊட்டி விடுகிறார். இதனைப் பார்த்த சிம்புவின் தங்கை மகன் ஏன் உங்களுக்கு ஊட்டி விட்டாங்க எனக் கேட்க உன் அம்மா உனக்கு ஊட்டி விடற மாதிரி என் அம்மா எனக்கு ஊட்டி விட்டாங்க என பதிலளித்துள்ளார் சிம்பு.

இதோ அந்த வீடியோ