Simbu valentine's Day special video

சிலம்பரசன் திருமணத்தைப் பற்றி நாயிடம் புலம்பும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Simbu valentine’s Day special video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது மாநாடு மற்றும் பத்து தல படத்தில் நடித்து வருகிறார்

இந்நிலையில் காதலர் தினமான நேற்று நாயுடன் சிம்பு திருமணம் குறித்து பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது, நீ பொண்ணு, இப்பதானே வளர்ந்து வந்துட்டு இருக்க நீ ஒரு பையன பார்க்கணும், அந்த பையனுக்கு உள்ள பிடிக்கணும் சில விஷயங்கள் எல்லாம் நடக்கணும், அதுக்கு எனக்கு கல்யாணம் நடக்கணும். நான் மட்டும் தனியா இருக்கேன் நீ மட்டும் ஜாலியா இருக்கேனா அது நியாயம் கிடையாது. அதுக்காக நீ இரவெல்லாம் உட்கார்ந்து யோசிச்சு அவருக்கு கல்யாணம் ஆகணும் அப்பதான் நம்ம சந்தோஷமா இருக்க முடியும் இல்லனா முடியாது அப்புறம் நீ என்கிட்ட கோச்சுக்க கூடாது என்று கூறியுள்ளார்.

மேலும் என் கஷ்டம் உனக்கு புரியுதா இல்லையா என்றும் ஏதாவது talk மேன் என்றும் கூறியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.