Simbu Reduced Weight for Maanaadu
Simbu Reduced Weight for Maanaadu

மாநாடு திரைப்படத்துக்காக சிம்பு வேற லெவல் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளன.

Simbu Reduced Weight for Maanaadu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகராக வலம் வரும் இவர் அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சிம்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் பல்வேறு தடைகளுக்கு பிறகு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் கொரானா வைரஸ் மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது படப்பிடிப்புகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Simbu Next With Anand Shankar

உடல் எடை கூடி குண்டாகி போயிருந்த சிம்பு தற்போது இப்படத்திற்காக 100 கிலோவில் இருந்து மொத்தமாக 79 கிலோ வரை எடையைக் குறைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மாநாடு படம் குறித்து வெளியான ருசிகர தகவல்

ஏற்கனவே கொஞ்சம் உடல் எடையை குறைத்து இருந்த சிம்பு தற்போது மேலும் 21 கிலோ எடை குறைத்து ஸ்லிம் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் காரணமாக மாநாடு திரைப்படம் சிம்புவிற்கும் சிம்பு ரசிகர்களுக்கும் மிகப்பெரிய கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.