Simbu
சிம்புவின் அடுத்த படம் பற்றி ஒரு அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது.

Simbu Next Movie Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள மாநாடு படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து சிம்பு யாருடன் கூட்டணி அமைப்பார்? அந்த படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்து விட்டது.

தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவலின் படி பொன்னியின் செல்வனின் முதல் பாகத்தை இயக்கி வரும் மணிரத்தினம் அடுத்ததாக சிம்புவை வைத்து ஒரு லவ் ஸ்டோரியை இயக்கி விட்டு அதன் பின்னர் பொன்னியின் செல்வன் 2 படத்தை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.