Simbu in Eeshwaran Movie Issue

ஈஸ்வரன் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Simbu in Eeshwaran Movie Issue : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் ஈஸ்வரன் திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படம் பொங்கலன்று வெளியாக இருந்தது. இந்நிலையில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் நஷ்ட ஈட்டுத் தொகையை சிம்பு தரப்பினர் தர வேண்டி உள்ளதால் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கியூப் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் ஏற்பட்ட நஷ்ட ஈட்டை அடுத்து நடிக்கப்போகும் படங்களில் மூலம் செட்டில் செய்வதாக கூறியுள்ளார் சிம்பு.

ஆனால் தற்போது வெளியாக இருந்த ஈஸ்வரன் படத்தின் மூலம் வரவேண்டிய 2 கோடியே 40 லட்சம் ரூபாய் இன்னும் வரவில்லை அதனால் தான் கியூபில் புகார் அளித்தோம்.

பணம் கொடுத்தால் மட்டுமே வாபஸ் பெறுவதாக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தெரிவித்துள்ளார்.

இதனால் ஈஸ்வரன் படம் வெளியாவதில் மீண்டும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.