Simbu in Birthday Special Video

நடிகர் சிம்புவின் பிறந்தநாள் இன்று என்பதால் சிம்பு ரசிகர்கள் இதனை தெரிக்கவிட்டு கொண்டாடி வருகின்றனர்.

Simbu in Birthday Special Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் மாநாடு.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

இன்று சிம்புவின் பிறந்த நாள் என்பதால் மதியம் இதன் டீசர் வெளியாக உள்ளது. பத்து தல படக்குழுவினர் சிம்புவின் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட அது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் சிம்புவின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்ரெண்டிங்கில் கொண்டாடி வருகின்றனர்.