புற்றுநோயால் வாடி வரும் நடிகர் தவசிக்கு சிம்பு செய்துள்ள உதவி ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.
Simbu Helps to Thavasi : தமிழ் சினிமாவில் கிழக்குச்சீமையிலே திரைப்படம் முதல் அண்ணாத்த திரைப்படம் வரை பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நடிகர் தவசி.
இவர் தற்போது உணவுக் குழாயில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக உடல் எடை மெலிந்து மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தனக்கு தயவு செய்து உதவுமாறு நடிகர்களுக்கு கோரிக்கை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை அடுத்து நடிகர் விஜய் சேதுபதி, சௌந்தர ராஜா, சிவகார்த்திகேயன், சூரி என தொடர்ந்து பல நடிகர்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
இவர்களைத் தொடர்ந்து தற்போது நடிகர் சிம்பு அவர்கள் தவசியின் மருத்துவ செலவுக்காக ரூபாய் ஒரு லட்சம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் சிம்பு ரசிகர்கள் எஸ் டி ஆரின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.