STR New Car : நடிகர் சிம்பு ரூ 4 கோடி மதிப்பில் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு. இவர் தற்போது தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சிம்பு ரூ 4 கோடி மதிப்பில் பென்டலி கார் ஒன்றை வாங்கியுள்ளார். புதிய காரில் சிம்பு மாஸாக அமைந்திருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
மேலும் செக்க சிவந்த வானம் படத்தை தொடர்ந்து வந்தா ராஜாவாக தான் வருவேன் என்ற படத்தில் சுந்தர் சி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் இந்த படங்களை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக உள்ள இந்தியன் 2 படத்தில் சிம்பு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
#STR to buy a new #Bentley Continental GT????#ContinentalGT #Thalaivan #VanthaRajavaThaanVaruvein #Positivity @hariharannaidu @STR_360 @ThalaivanSTR_FC @STRfans_World pic.twitter.com/pk95h5Tk7I
— Kalakkal Cinema (@kalakkalcinema) November 14, 2018