YouTube video

 Nishabdham Movie Review : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான மாதவன், அனுஷ்கா செட்டி, அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் சைலன்ஸ். இந்த படத்தை ஹேமந்த் மதுகர் இயக்கியுள்ளார். இப்படம் இன்று அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாகியுள்ளது.

படத்தின் கதைக்களம் :

ஒரு ஊரில் ஒரு வில்லாவில் திடீரென ஒரு தம்பதி மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள். இவர்களின் மரணத்திற்கு காரணம் என்ன என போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து இந்த வீடு பேய் வீடு என முத்திரை குத்தப்பட்டு 46 வருடங்களாக யாரும் வாங்காமல் இருந்து வருகிறது.

Nishabdham
Nishabdham

அதன் பின்னர் காதுகேளாத மற்றும் வாய் பேச முடியாத அனுஷ்கா செட்டி மற்றும் அவரது காதலர் மாதவன் ஆகியோர் இந்த வீட்டிற்கு ஒரு ஓவியத்தை எடுப்பதற்காக செல்கின்றனர். அப்போது மாதவனும் இதேபோல் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்.

அனுஷ்கா செட்டி அதிஸ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் போலீஸ் அதிகாரியான அஞ்சலி இந்த வழக்கை விசாரணை செய்கிறார். மாதவனுக்கும் அனுஷ்காவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்த ஓரிரு நாட்களிலேயே அனுஷ்காவின் நெருங்கிய தோழியான ஷாலினி பாண்டே காணாமல் போகிறார்.

மாதவன் கொலைக்கும் அஞ்சலியின் உயர் போலீஸ் அதிகாரி, ஷாலினி பாண்டே ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக எண்ணி அந்த கோணத்தில் தன்னுடைய விசாரணையை துரிதப்படுத்துகிறார். இறுதியில் என்ன நடந்தது?? உண்மையில் யார் கொலையாளி?? என்பதுதான் படத்தின் மீதி கதை களம்.

படத்தை பற்றிய அலசல்

நடிகர் மாதவன் கெஸ்ட் ரோல் போல இந்த படத்தில் நடித்திருந்தாலும் தனக்கே உரிய ஸ்டைலில் சிறப்பாக நடித்துக் கொடுத்துள்ளார்.

நடிகை அனுஷ்கா காது கேளாத வாய் பேசாதவராக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அஞ்சலி துருதுரு போலீசாக இந்த படத்தில் வலம் வருகிறார். மற்ற நடிகர்-நடிகைகள் அவர்களுக்கான வேலைகளை கச்சிதமாக செய்து கொடுத்துள்ளனர்.

தொழில்நுட்பம்

இசை :

கிரிஸ் ஜி இப்படத்திற்கு இசையமைக்க கோபி சுந்தர் சவுண்ட் ட்ராக்கை உருவாக்கியுள்ளார்.

ஒளிப்பதிவு :

Shaneil Deo இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் கொடுத்துள்ளார் எனக் கூறலாம்.

எடிட்டிங் :

பிரவின் புடி என்பவர் படத்துக்கு எடிட்டிங் பணிகளை மேற்கொண்டிருந்தார். படத்தை சரியான கோர்வையாக கொடுத்துள்ளார்.

இயக்கம் :

ஹேமந்த் மதுகர் சைலன்ட் என்ற திரைப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாக்கியுள்ளார். திரில்லர் கதையை கையில் எடுத்து அதை சரியாக கொண்டு சென்றுள்ளார்.

தம்ஸ்ப் அப் :

  1. நடிகர், நடிகைகளின் நடிப்பு
  2. படத்தின் இசை
  3. ஒளிப்பதிவு

தம்ஸ் டவுன் :

  1. இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம்.
  2. பாடல்கள் மனதை கவரவில்லை.
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.