Sidharth Ask Valimai Update to Hema Qureshi

வலிமை படம் ஹீரோயினியிடம் படத்தின் அப்டேட் கேட்டுள்ளார் பிரபல நடிகரான சித்தார்த்.

Sidharth Ask Valimai Update to Hema Qureshi : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் இந்த படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

வரும் மே 1-ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாள் விருந்தாக வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் சித்தார்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட அதற்கு வலிமை ஹீரோயின் ஹீமா குரோஷி கமெண்ட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதனைப் பார்த்த சித்தார்த் மேடம் வலிமை அப்டேட் கொடுங்க என கேட்டுள்ளார். சித்தார்த்தின் இந்த கமெண்ட்டுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. அஜித் ரசிகர்களும் ஆமாம் எங்களுக்கு வலிமை அப்டேட் வேண்டும் என கூறி வருகின்றனர்.