Shruti Haasan About Plastic Surgery
Shruti Haasan About Plastic Surgery

மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அது ஏன் என முதல் முறையாக பதில் கூறியுள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன்.

Shruti Haasan About Plastic Surgery : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான இவர் சூர்யாவுக்கு ஜோடியாக ஏழாம் அறிவு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிப் படங்களில் நடித்து வருகிறார். மேலும் பாடகர், டான்ஸர் என பன்முக திறமைகளையும் கொண்டுள்ளார்.

ஸ்ருதி ஹாசன் தன்னுடைய நோக்கி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன்னை அழகாக்கி கொண்டதாக நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்த நிலையில் அது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

வலிமை பர்ஸ்ட் லுக் இந்த தேதியில் தான் ரிலீஸ்?? அப்டேட்டுக்கு பச்சைக்கொடி காட்டிய அஜித். – மரண மாஸ் தகவல் இதோ

ஆம், பேட்டி ஒன்றில் இது குறித்து கேட்டதற்கு என்னுடைய மூக்கு உடைந்து விட்டதால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேன். அந்த மூக்கு இருந்த விதம் எனக்கு பிடிக்கவில்லை, அதனால் தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேன் என கூறியுள்ளார்.

தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக ஸ்ருதிஹாசன் மும்பையில் உள்ள அப்பார்ட்மெண்டில் தனியாக வசித்து வருகிறார்.

மேலும் இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.