Shraddha Srinath Bike Accident Video

பைக் ஓட்ட தெரியாமல் ஓட்டி கீழே விழுந்து ரசிகர்களை பதற வைத்துள்ளார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

Shraddha Srinath Bike Accident Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷர்த்தா ஸ்ரீநாத். விக்ரம் வேதா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்த இவர் அஜித்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தையடுத்து மாதவனுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து மாறா என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தற்போது ஷ்ரத்தா ஸ்ரீநாத் புதிய படம் ஒன்றிற்காக ராயல் என்ஃபீல்டு பைக்கை ஒட்டி பயிற்சி பெற்று வருகிறார்.

இதற்கான பயிற்சியில் ஈடுபடும் போது பைக் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/Shraddha_Offi/status/1366596989274628096?s=19