Shivani Narayanan Childhood Photo

நடிகை ஷிவானி நாராயணனின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்து வருகிறது.

Shivani Narayanan Childhood Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்கள் மூலம் பிரபலமானவர் ஷிவானி நாராயணன்.

இவர் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் பங்கேற்றுள்ளார்.

இவர் இந்த நிகழ்ச்சியில் பெரியதாக ஈடுபாட்டோடு விளையாடவில்லை என பலர் குற்றம் சாட்டி வந்தாலும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் 4 மணிக்கு கவர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்த வீடியோக்கள் மூலம் இவரை இன்ஸ்டாகிராமில் பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை 4 லட்சமாக உயர்ந்தது.

தற்போது ஷிவானியின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. அவர் சிறு வயதில் எப்படி இருந்துள்ளார் என்பதை நீங்களே பாருங்க.