Shivani Narayanan About Her Marriage

அவரை தான் கல்யாணம் பண்ணிக்க ஆசை என பிக் பாஸில் கலந்து கொள்வதற்கு முன்பே அளித்த பேட்டி ஒன்றில் பேசுகிறார்.

Shivani Narayanan About Her Marriage : தமிழ் சின்னத்திரையின் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனில் 17 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன் வைத்து இவர் பேட்டி ஒன்றில் பல்வேறு விஷயங்களை பேசியுள்ளார்.

அப்போது உங்களுக்கு யாரை திருமணம் செய்து கொள்ள ஆசை என கேட்டதற்கு நடிகர் சூர்யாவை எனக்கு பிடிக்கும் ஆனால் அவருக்கும் எனக்கும் வயது வித்தியாசம் அதிகம் என்பதால் அவரை திருமணம் செய்து கொள்ள முடியாது. அவருடைய நடிப்பு பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அஜித் மற்றும் விஜய் பிடிக்கும் எனவும் கூறியுள்ளார். மேலும் நடிகர் அதர்வாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப் படுவதாகவும் அவர் மீது எனக்கு ஒரு கிரஸ் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

ஷிவானி நாராயணன் வெறும் பன்னிரண்டாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது‌.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.