Shivani Narayanan About Bigg Boss

பிக்பாஸ் வீட்டிற்குள் நான் பேசியதெல்லாம் காட்டவில்லை என சிவானி தெரிவித்துள்ளார்.

Shivani Narayanan About Bigg Boss4 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சில வாரங்களுக்கு முன்னர் நிறைவு பெற்றது.

இந்த சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் நாயகியாக நடித்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் வீட்டுக்குள் பெரிதாக எந்தவித டாஸ்க்கிலும் ஈடுபடவில்லை. இதனால் ரசிகர்கள் இவரை வெறுக்க தொடங்கினர்.

இந்த நிலையில் தற்போது ஷிவானி நாராயணன் லைவ் வீடியோவில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளர். அப்போது ரசிகர் ஒருவர் இப்போ நல்லா பேசுறீங்க ஏன் பிக் பாஸ் வீட்டில் பேசவில்லை என கேட்டுள்ளார்.

அதற்கு சிவானி ஸ்வீட்டா கேக்கறீங்க. நான் பிக் பாஸ் வீட்டில் நிறைய பேசினேங்க, ஆனால் அதையெல்லாம் உங்களுக்கு காட்டவில்லை என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.