Shivangi Signed in Article15 Tamil Remake

குக்கு வித் கோமாளி சிவாங்கி டான் படத்தை தொடர்ந்து இன்னொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Shivangi Signed in Article15 Tamil Remake : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் சிவாங்கி.

இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழால் பாடகியான இவர் தான் படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் வெகு விரைவில் தொடங்க உள்ளன. இந்த நிலையில் சிவாங்கி இன்னொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அருண் ராஜா காமராஜா இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகிவரும் ஆர்டிகல் 15 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த தகவல் வெளியாகி ஷிவாங்கி ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.