பொண்ணு ரெடி மாப்பிள்ளை எங்கே என திருமணக்கோலத்தில் பிக்பாஸ் ஷெரின் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Sherin in Marriage Costume : தமிழ் சின்னத் திரையில்உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் கட்சியின் மூன்றாவது சீஸனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் ஷெரின். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்திருந்தார்.
அதன் பின்னர் விசில் திரைப்படத்தில் அழகிய அசுரா என்ற பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். பின்னர் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ஷெரின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரி என்ட்ரி கொடுத்தார். இப்போதும் வாய்ப்புகள் இல்லை. இருந்தாலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணக்கலத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பொண்ணு ரெடி மாப்பிள்ளை எங்கே என பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நான் ரெடி என கமெண்ட் அடித்து வருகின்றனர்.